டில்லி

விங் கமாண்டர் அபிநந்தனுக்கும் பாலகோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்திய விமானிகளுக்கு ராணுவத்தின் உயரிய விருதுகள் வழங்கப்பட உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று பாகிஸ்தானின் ஜெய்ஷி முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலபடை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஅர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர்.

அதையொட்டி பாலகோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்க முகாம்களை இந்திய விமானப்படை வீரர்கள் தாக்குதல் நடத்தி அழித்தனர்.    இதனால் பாகிஸ்தான் விமானப்படையினர் இந்தியா மீது எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தான் விமானங்களை விரட்டிச் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன் அந்நாட்டின் எஃப் 16 ரக போர் விமானத்தை தாக்கி அழித்தார்.  அப்போது அவர் பாகிஸ்தானின் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார்.  உலக நாடுகள் அழுத்தம் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் விமானத்தை தாக்கி அழித்த அபிநந்தன் வீரச்செயலை பாராட்டி இந்திய ராணுவத்தின் மூன்றாம் உயரிய விருதான வீர் சக்ரா விருதினை அபிநந்தனுக்கு வழங்கப்பட உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலகோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதம் முகாம்களை விமானப்படை தாக்குதல் மூலம் அழித்த ஐந்து விமானப்படை வீரர்களுக்கு வாயுசேனா விருது வழங்கப்பட உள்ளது.