தேர்தல் வெற்றிக்காக ராணுவத்தைப் பயன்படுத்துவதா?: முன்னாள் ராணுவ கமாண்டர் ஹுடா

சண்டிகார்:

தேர்தலில் வெற்றி பெறுவற்காக ராணுவத்தைப் பயன்படுத்துவது கவலை அளிப்பதாக, இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை கமாண்டர் டிஎஸ். ஹுடா தெரிவித்துள்ளார்.


கடந்த 2016-ம் ஆண்டு வடக்கு தலைமை கமாண்டராக இருந்த ஹுடா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் மீது துல்லிய தாக்குதல் நடத்துவதற்கு காரணமாக இருந்தவர்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ராணுவம் தொடர்பாக அரசியல் விவாதம் நடப்பது கவலை அளிக்கிறது. அரசியல் லாபத்துக்காக சமீபகாலமாக ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரசியல் ரீதியான விவாதங்களில் வெல்ல ராணுவத்தை பயன்படுத்துகின்றனர். சிலர் தேர்தலில் வெற்றி பெற ராணுவத்தைப் பயன்படுத்துகின்றனர்.

வெளிப்படையாகச் சொன்னால், இந்த போக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்றார்.