இடமாற்றத்துக்காக லஞ்சம் வாங்கிய வழக்கில் ராணுவ அதிகாரி கைது

 

டெல்லி

ட்சக்கணக்கில் ரூபாய்கள் கை மாறியதாக கூறப் படும் இடமாற்ற வழக்கில் ஒரு ராணுவ லெட் கர்னலையும் ஒரு இடைத்தரகரையும் சி பி ஐ கைது செய்துள்ளது

பெங்களூருவை சேர்ந்த ஒரு ராணுவ அதிகாரிக்கு அவர் விரும்பும் இடத்துக்கு இட மாற்றம் செய்வதற்காக இரண்டு லட்சத்துக்கு மேல் லஞ்சம் பெறப்பட்டுள்ளது,  இந்த பணம் ஹவாலா முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதை போல பல அதிகாரிகள் தாங்கள் விரும்பும் இடத்துக்கு இட மாற்றம் பெற பல லட்சக்கணக்கான ரூபாய்கள் தர தயாராக இருந்ததாக தெரிகிறது

இது குறித்து துப்பறிந்த சி பி ஐ, லெட் கர்னல் சுவ்ரமணி மோனி, புருஷோத்தம்,  கௌரவ் கோஹ்லி, மற்றும் சுபாச் ஆகியோர் மீது வழக்கு பதிந்தது.  இந்த வழக்கில் தற்போது சுவ்ரமணி மோனி மற்றும் கௌரவ் கோஹ்லி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது போல் இன்னும் பல பண பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கலாம் என அஞ்சப்படுவதால் விசாரணை தொடர்ந்து நடை பெற்று வருகிறது