கோவையில் பிரமாண்ட ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் – விரிவான விபரங்கள்!

கோவை: வருகின்ற மே மாதம் 5 முதல் 17ம் தேதிவரை, கோவையில், இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

சிப்பாய் உள்ளிட்ட பல்வேறு நிலைகளிலான பணிகளுக்காக ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முடிவடையும் காலகட்டத்தில், 17 வயது 6 மாதங்கள் நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

மேலும், 23 வயதிற்கு குறைந்தவராக இருப்பதும் முக்கியம்.
கோவையில் நடைபெறும் இந்த முகாமில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் இந்த ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொள்வதற்கு, மார்ச் 21 முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் சென்று ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம்.