மும்பை: டிஆர்பி மோசடி வழக்கில், பத்திரிகையாளர் அர்னாப் மீது 3600 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், பாலகோட் தாக்குதல் தாக்குதல் குறித்து, அர்னாப் பேசியது தொடர்பான தகவல் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாலகோட் தாக்குதல் குறித்து அர்னாபுக்கு முன்கூட்டியே எப்படி தெரிந்திருந்தது, இந்திய ராணுவ ரகசியங்களை  பத்திரிகையாளர் அர்னாபுக்கு கூறியது யார்  என்பது என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், அர்னாப் கோஸ்வாமியின் ரிப்பளிக் டிவி வளர்சியை அதிகரித்து காட்டும் வகையில் டிஆர்பி ரேட்டிங் மோசடி நடைபெற்றது கண்டறியப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான அர்னாப் உள்பட பலர் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளனர். இது  தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

டிஆர்பி மோசடி வழக்கில், மும்பை காவதுறையினர் சுமார் 3600 பங்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது,  அர்னாப் கோஸ்வாமி, , ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின் (பார்க்) (TV ratings agency BARC, Partho Dasgupta ) முன்னாள் தலைமை செயல் அதிகாரி தாஸ்குப்தாவுக்கும் இடையில், வாட்ஸ் ஆப் மூலம் நடைபெற்ற உரையாடலும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில்  சுமார் 1000 பக்கங்களுக்கு இவர்கள் இருவரின் உரையாடல்கள் கோடிட்டு காட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து,  காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழிநுட்ப பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கௌரவ் பந்தி (@GauravPandhi) தனது டிவிட்டர் பக்கத்தில், அர்னாப் கோசமிக்கும், பிரதோ தாசுக்கும் இடையில் நடந்து உரையாடலின் ஒரு பகுதியை பகிர்ந்துள்ளார், இது வைரலாகி வருகிறது.

இந்த உரையாடல், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது. அதாவதுரு,  கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 23ந்தேதி நடைபெற்றுள்ளது. அதில், தாஸ்குப்தாவுடன் பேசிய அர்னாப்,

மிகப்பெரிய விஷயம் ஒன்று நடைபெறவுள்ளது என்று கூறுவதாகவும், அதற்கு தாஸ்குப்தா, தாவுத் இப்ராஹிம் தொடர்பானதா என கேள்வி கேட்கிறார். ஆனால், அர்னாப், இது  பாகிஸ்தான் தொடர்பானது என்றும், இந்தமுறை மிகப்பெரிய அளவில் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கிறார். இந்த விஷயம், பாராளுமன்ற தேர்தல் சமயத்தில்  அந்த பெரிய மனிதருக்கு (மோடிக்கு) இது சாதகமாக இருக்கும், இதனால்  அவர் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவார் என்று கூறுகிறார். இதற்கு தாஸ்குப்தா, பாகிஸ்தான்மீது தாக்குதலா என்ன என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதில் கூறும் அர்னாப்,  இது,  வழக்கமான தாக்குதலை விட பெரியது என்றும் காஷ்மீர் தொடர்பான மிகப்பெரிய விஷயமும் கூட, என்று பதில் அளிக்கிறார். அத்துடன், இந்திய மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தாக்குதல் அமையும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அர்னாப் கூறுகிறார்…இவ்வாறாக அந்த உரையால் நிகழ்ந்துள்ளது.

இந்த உரையாடல் முடிந்த அடுத்த சில நாட்களில் பாலகோட் தாக்குதல் நடத்தப்பட்டது. அதாவது, அடுத்த 3 நாளில் (2019ம் ஆண்டு பிப்ரவரி 26 ந்தேதி) இந்திய விமானப்படை, காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையை கடந்து, பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ள பாலாகோட் நகரில் குண்டுவீசி தாக்குதல் நடத்தி சுமார் 300 பயங்கரவாதிகளையும், அவர்களின் முகாம்களையும் அழித்தது.

இந்தியாவின் ராணுவ நிகழ்வுகள் யாருக்கும் தெரியாத வகையிலேயே ரகசியம் காக்கப்படும். அதுபோலவே பாலகோடு தாக்குதல் குறித்து  யாருக்கும் தெரியாது. தாக்குதல் நடைபெற்று முடிந்த பிறகே, பிரதமர் மோடியால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது, தாக்குதல் குறித்து முன்னதாகவே அர்னாபுக்கு தெரிந்தது எப்படி? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ராணுவ ரகசியங்கள் தெரியக்கூடிய வகையில் அர்னாப் இந்திய உள்துறையிலும், பாதுகாப்பு துறையிலும் செல்வாக்கு பெற்றவரா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி,  புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.

முன்னதாக 2019ம் ஆண்டு  பிப்ரவரி 14ஆம் தேதி, காஷ்மீரின் புல்வாமா பகுதியில், ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 46 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலை பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும், ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்தியதாக கூறப்பட்டது. அதற்கு  பதிலடி கொடுக்கும் வகையில், பாலகோட் தாக்குதலை நடத்தப்பட்டது.

இந்த  தாக்குதல் எதிரொலி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலித்தது.  தேர்தலில்,  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 303 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.