ராணுவம் – பயங்கரவாதிகள் இடையே விடிய விடிய துப்பாக்கிச் சண்டை!

ஸ்ரீநகர்,

ம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் வந்த வாகனத்தை வழி மறித்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக விடிய விடிய துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்தினர். இதனால் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தின ருக்கும் இடையே  கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

ராணுவத்தினரின் சரமாரியான தாக்குதலுக்கு  பதிலடிகொடுக்க முடியாத பயங்கரவாதிகள் பதுங்கினர். அவர்களுக்கு ஆதரவாக   பிரிவினைவாத குழுக்களைச் சேர்ந்த  இளைஞர்கள் ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்கினர்.

இந்த சந்தரப்பத்தை பயன்படுத்தி தப்பி ஒடிய பயங்கரவாதிகள் அருகிலுள்ள கிராமத்துக்குள் புகுந்தனர். அந்த கிராமத்தை சுற்றி வளைத்த ராணுவத்தினர் பயங்கரவாதிகள் தப்ப முடியாதபடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே காஷ்மீர் எல்லைப்பகுதியான யூனி  பகுதியில் இரண்டு பயங்கரவாதிகளின் உடல்கள் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எல்லையில் ஊடுருவ முயன்ற அவர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.