ராணுவ கிடங்கில் தீ : பிரதமர் கவலை ; தளபதி விரைந்தார் 

நாக்பூர்: மகாராஷ்ட்டிரா மாநிலம் புல்கான் பகுதியில் ராணுவ வெடி பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து பிரதமர் மோடி, காங்கிரஸ்  தலைவர் சோனியா , துணை தலைவர் ராகுல் ஆகியோர் ஆழ்ந்த கவலை தெரிவித்து உள்ளனர்.

முதலில் வந்த தகவல்கள், ராணுவ தளவாடங்கள் சேமிப்பு கிடங்கில் 20 பேர் பலியானதாகவும், 20 பேர் காயமுற்றதாகவும் தெரிவித்தன.  ஆனால் தற்போது சுமார் 100 பேர்  காயமுற்றள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காயம்பட்ட பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து மாநில முதல்வர் பட்னாவிஸ் ,”விபத்தில் இதில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

download (1)

சம்பவம் ஏற்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் குடியிருந்தவர்கள் வேறு பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி, தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், “ சம்பவம் குறித்து அறிந்து கவலை அடைந்தேன். முழு விவரத்தை பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டறிந்தேன். அவர்களுக்குஎனது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்த துயரத்தில் வாடும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் எனது துயரத்தை பங்கெடுக்கிறேன். காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ராகுல் தனது இரங்கல் செய்தியில்,” சம்பவம் குறித்து மன வேதனைக்குள்ளானேன், பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய வேண்டுகிறேன்” என்று  கூறியுள்ளார்.

ராணுவ தளபதி தல்பீர்சிங் சம்ப இடத்திற்கு விரைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed