சிம்புவின் ‘ஈஸ்வரன்’ போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்….!

‘மாநாடு’ படத்திற்கு பிறகு, இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடிக்கிறார்.சிம்பு. இது சிம்புவின் 46 வது படம்.

இந்தப் படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், பாடலாசிரியராக யுகபாரதி ஆகியோர் பணிபுரிகிறார்கள்.

இதில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

படத்தின் பர்ஸ்ட்லுக்கை படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர்.சிம்புவின் ட்ரான்ஸபார்மேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

https://twitter.com/Simbu_bloods/status/1320946736026669056

நேற்று வெளியான போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்,இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் சிலர் பாலாபிஷேகம் செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.