திமுக கூட்டணியை ஆதரிக்கும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

milk_5

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் தெரிவித்துள்ளது.

சேலத்தில், நடைபெற்ற  அச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, அச் சங்கத்தின்  மாநிலத் தலைவர் செங்குட்டுவேல் தெரிவித்தார்.

மேலும் அவர் இது குறித்து கூறியதாவது, “ பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் நலன் காக்க, திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கிறோம்” என்றார்.