கொழும்பு

லங்கை அமைச்சர் ருவான் விஜேவர்தனெ தற்கொலைப் படை தீவிரவாதிகளில் சிலரின் விவரங்களை தெரிவித்துள்ளார்.

 

 

கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கை தலைகரான கொழும்புவில் தொடர்ந்து எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 350க்கும் மேற்பட்டவர் கொல்லபட்டனர்.  சுமார் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தேவாலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் ஏராளமான வெள்நாட்டு சுற்றுலா பயணிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து இலங்கை பாதுகாப்புத் துரை அமைச்சர் ருவான் விஜே வர்தனெ, “இந்த தற்கொலைப்படையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் பெண் ஆகும். இந்தப் பெண்ணின் பெயர் ஃபாதிமா இப்ராகிம் ஆகும். இவர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த கோடிஸ்வரர் இன்சாஃப் அகமது இப்ராகிமின் மனைவி ஆவார்.

இவருக்கு மூன்று சிறு வயது மகன்கள் உள்ளனர். தவிர இவர் கர்ப்பமாக இருந்துள்ளார். இவர் காவல்துறையினர் தங்கள் வீட்டை சோதனை இட வந்த போது தன்னையும் குழந்தைகளையும் மாய்த்துக் கொண்டுள்ளார்.

இவருடைய கணவர் இன்சாஃப் அகமது இப்ராகிம் தனது சகோதரர் இலாம் அகமது இப்ராகிமுடன் இணந்து தனது வீட்டில் இருந்து கிளம்பி சின்னமான் கிராண்ட் மற்றும் சங்க்ரி லா ஓட்டல்களில் குண்டுகளுடன் தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.