திருவனந்தபுரம்:

ராணுவ தளபதி அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும், அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் என  அறிவுரை கூறுவது சரியல்ல என்று கேரளாவில் நடைபெற்ற காங்கிரஸ் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர். ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்தார்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த ராணுவ தளபதி பிபின் ராவத், மாணவர்களை சில அரசியல் கட்சிகள் தவறாக வழிநடத்திச் செல்வதாக குற்றம் சாட்டினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. பிபின் ராவத் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் 135வது நிறுவன நாளையொட்டி நாடு முழுவதும் கொடிஅணிவகுப்பு பேரணி நடைபெற்றது. கேரளாவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், பிபின் ராவத் கூறிய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இராணுவத்திற்கு தலைமை தாங்கி நீங்கள் உங்கள் வேலையை கவனியுங்கள்,  உத்தரப்பிரதேசத்தின் ராணுவத் தலைவர் மற்றும் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) அரசாங்கத்தை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது, ஒரு “அவமானம்”,  “இது இராணுவ ஜெனரலின் வேலையா?” என சிதம்பரம் கேள்வி எழுப்பியவர், ராணுவ ஜெனரல் அரசியல் பேசுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார் என்று மோடி அரசையும் குறை கூறினார்.

தொடர்ந்து பேசியவர், ஒரு போரில் எவ்வாறு செயல்படுவது என்று உங்களுக்குச் சொல்வது அரசியல்வாதிகள் வேலையல்ல. அதேபோல, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றுசொல்வது ராணுவத்தின் வேலையல்ல என்று கூறியவர், அது ராணுவ தளபதியின் பணியும் அல்ல என்றவர் … உங்க வேலையைப் மட்டும் பாருங்க…கூறி கண்டனம் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப நீங்கள் போரை நடத்துகிறீர்கள், நாட்டின் அரசியலை நாங்கள் எங்கள் கொள்கைகள் அடிப்படையில் நடத்திக் கொள்வோம் என்றவர் உங்களுக்கு ஒ கோரிக்கைவிடுக்கிறேன். நீங்கள் ராணுவத்தின் தலைவராக ​உங்கள் வேலையை பாருங்கள். அரசியல்வாதிகள் செய்வதை அரசியல்வாதிகள் செய்யட்டும். இந்திய அரசியலமைப்பிற்கு ஏற்படும் கடுமையான ஆபத்தை புரிந்துகொண்டதால்தான், மாணவர்களும் இளைஞர்களும், குடியுரிமை சட்டத்தை எதிர்க்க முடிவு செய்தனர். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு ஆகியவை இணைந்த இரட்டையர்கள், அவை முஸ்லிம்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்த சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது, அது உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படும், என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.