சார்ஜா:

சார்ஜாவை சேர்ந்த எமிரேட்ஸ்களுக்கு மாதந்தோறும் 17,500 திர்ஹாம் ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

சார்ஜா மன்னர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி சமூக பாதுகாப்பு சட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெண்கள் 55 வயதிலும், ஆண்கள் 60 வயதிலும் பணி ஓய்வு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் செய்ய குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 60 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் செய்தவர்களுக்கு 17,500 திர்ஹாமுக்கு குறைவில்லாமல் ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஓய்வூதிய காப்பீடு அல்லது உதவித் தொகை பெறும் போது அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்கள், அரசு குறிப்பிட்ட முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் பணியாற்றிய காலமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இது சார்ஜாவுக்கு மட்டுமே பொருந்தும். இதர ஐக்கிய அரபு எமிரேட்ஸ்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.