சென்னை

காங்கிரஸ் அறிவித்துள்ள குறைந்த பட்ச ஊதிய திட்டம் படிப்படியாக அமுல் படுத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 25 ஆம் தேதி அதாவது நேற்று முன் தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் குறைந்த பட்ச ஊதிய திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். அந்த திட்டத்தின்படி வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு மாதம் ரூ.6000 வீதம் ஆண்டுக்கு ரூ.72000 ஊதியம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இது நடைமுறைக்கு ஒத்து வராத திட்டம் என பாஜகவினர் கூறி வந்தனர். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இந்த திட்டம் நடைபெறக் கூடிய திட்டம் தான் என அறிவித்தார். அத்துடன் அதற்காக ஒரு சில பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப் பட வேண்டி இருக்கும் என அவர் கூறினார். இன்று முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சிதம்பரம், “இந்த திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சித் தலைவர்கள் ஒருளாதார நிபுணர்களிடம் கலந்தாலோசித்டுள்ளனர். அவர்கள் இந்த திட்டம் சாத்தியமானது எனவும் நமது நாடு இந்த திட்டத்தை அமுல்படுத்தும் திறன் உடன் உள்ளது எனவும் தெரிவித்த பிறகே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள்து.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தக் கூடியதுதான் என ஏற்கனவே முன்னாள் ரிசர்வ் வ்ங்கி ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த திட்டம் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வ்ந்த அடுத்த நாளே நிறைவேற்றப்பட மாட்டாது. இந்த திட்டத்தில் சுமார் 5 கோடி குடும்பங்கள் நலம் பெறும். அவர்களை அடையாளம் காணும் பணி ஒரே நாளில் முடியது. அதனால் இந்த திட்டம் படிப்ப்டியாக நிறைவேற்றப்படும்.

இந்த திட்டம் நிறைவேற்ற நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. அவர்கள் ஆலோசனைப்படி இந்த திட்டம் அமைக்கப்படும். ஒவ்வொரு படியாக வடிமைக்கப்பட்டு அதன் பிறகு அடுத்த கட்டத்துக்கு முன்னேறும். இந்த ஐந்து லட்சம் குடும்பங்களை கண்டறிவதற்கான விவரங்கள் ஏற்கனவே உள்ளது” என தெரிவித்துளார்/