Random image

நெஞ்சுவலி: அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

மிழக அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் நெஞ்சுவலி  காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம், தற்போது சட்டத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார்.

45 வயதாகும் அவருக்கு  இன்று அதிகாலையில் திடீரென  நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அமைச்சருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.