Random image

முதல்வர் எடப்பாடி பெயரை குறிப்பிடாத அமைச்சர் சி.வி.சண்முகம்

முதல்வர் எடப்பாடி பழனிசாசமியுடன் கருத்துவேறுபாடு கொண்டிருப்பதாக யூகத்தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் அவரது பெயரை அமைச்சர் சி.வி.சண்முகம் குறிப்பிடாமல் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியினர் வார்த்தைக்கு வார்த்தை தங்களது முதல்வர் பெயரை உச்சரித்து புகழ்பாடுவது வழக்கம். அதற்கு தற்போதைய ஆளுங்கட்சியினரும் விதிவிலக்கு அல்ல.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த  பல்வேறு கிராமங்களை சேர்ந்த 300 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா திண்டிவனத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இருசக்கர வாகனத்தை அளித்தார்.


இந்த விழாவில் 15 நிமிடம் பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஒருமுறை கூட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின்  பெயரை குறிப்பிடவில்லை.

முதல்வருக்கும் சி.வி.சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக யூகச் செய்தி உலவும் சூழலில் முதல்வர் பெயரை அமைச்சர் குறிப்பிடாமல் பேசியது அ.தி.மு.க. வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் இன்னொரு சர்ச்சையா, “அரசு விழாவை அதிமுகவின் கட்சி நிகழ்ச்சியாக மாற்றிவிட்டனர்” என்ற புகாரும் எழுந்துள்ளது.

“அ.தி.மு.க. கொடிகள் மற்றும் பேனர்களுடன் அமைச்சர் சி.வி.சண்முகத்து வரவேற்பு அளிக்கப்பட்டது, திண்டிவனம் சீத்தாபதி சொக்கலிங்கம், மயிலம் மருத்துவர் மாசிலாமணி, செஞ்சி மஸ்தான் ஆகிய மூன்று திமுக எம்எல்ஏக்களையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்காதது ஆகியவை இந்த அரசு நிகழ்ச்சியை கட்சி நிகழ்ச்சியாக்கிவிட்டது” என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் முந்நூறு பேர் அமைச்சரின் வருகைக்காக   சுமார் மூன்று மணி நேரமாக உணவருந்தாமல் காத்திருக்க வைக்கப்பட்டதும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.