அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

சென்னை:
கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.


கடந்த  அக்டோபர்  13-ஆம் தேதி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட துரைக்கண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்றல் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 19 நாட்களாக முன்பு காவேரி  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அவரது உடல் நிலை தொடர்ந்து  மோசமானதை தொடர்ந்து  அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் மூலம் உச்சபட்ச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்த போதிலும்,  அவரின் உடல் உறுப்புகளின் செயல்பாடு மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமாக இருந்து வருவதாக இந்நிலையில்  நேற்றிரவு 11.15 மணி அளவில் அவர் காலமானதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இவரது மறைவுக்கு முதல்வர், துணை முதல்வர்  உள்ளிட்ட  பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.