டில்லி

ரும் மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி மக்களுக்குக் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதி அளித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டறிய உலக நாடுகளில் கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,  இதில் ரஷ்யா ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.  இந்தியாவில் இதுவரை 3 தடுப்பூசிகள் இறுதிக் கட்ட சோதனையில் உள்ளன.  இதில் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாராகும் கோவாக்சின் தடுப்பூசியும் ஒன்றாகும்.

நேற்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கொரோனா தடுப்பூசி குறித்து செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.  அப்போது ஹர்ஷ் வர்தன், “வரும் மார்ச் மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும்.   இந்த தடுப்பூசி குறித்து மக்களுக்கு ஏதேனும் நம்பிக்கை இல்லாமல் இருந்தால் அதைப் போக்க நானே முதல் நபராகத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள தயாராக உள்ளேன்.

இந்த தடுப்பூசி மக்களுக்கு வழங்குவதில் தேவையின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்   இதன்படி பொருளாதார வசதியை பொருட்படுத்தாமல் முதலில் தேவை உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  இதில் கொரோனா பணியாளர்கள்,  மூத்த குடிமக்கள், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோர் இடம் பெறுவார்கள்.

இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு, விலை, அவசரத் தேவை, தயாரிப்பு காலம் ஆகியவை குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.  இந்த தடுப்பூசி தயாரிப்பு விரைவில் முழு அளவை அடைந்து அனைத்து மக்களுக்கும் கிடைக்க வழி உண்டாகும்” எனத் தெரிவித்துள்ளார்.