மத்திய அரசு ரூ.6000 கோடி வரி பாக்கியை தருமா ? தமிழக அமைச்சர் கேள்வி
சென்னை
மத்திய அரசு தமிழக அர்சுக்கு தர வேண்டிய ரூ.6000 கோடி வரி பாக்கியை தர தயாராக உள்ளதா என அமைச்சர் ஜெயக்குமார் வினா எழுப்பியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினத்தோறும் உயர்ந்து தற்போது வரலாறு காணாத அளவை எட்டி உள்ளது. இதற்காக மத்திய அரசின் கலால் வரியைக் குறைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதற்கு மறுத்துள்ள மத்திய அரசு அதற்கு பதிலாக மாநில அரசுகள் விதிக்கும் வரியைக் குறைக்க யோசனை தெரிவித்தது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், “பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அளவுக்கு அதிகமாக மத்திய் அரசு ஏற்றிக் கொண்டே செல்கிறது. இதை நாங்கள் நிச்சயம் ஏற்க மாட்டோம். அத்துடன் மத்திய அமைச்சர் 42% வரியை தமிழக் அரசுக்கு அளிப்பதாக தவறாக கூறி உள்ளார். மத்திய அரசு வரி பங்கீட்டை 30% லிருந்து 42% அக உயர்தியதே தவிர அதை தமிழக அரசுக்கு தரவில்லை.
மத்திய அரசு தரவேண்டிய ரூ.6000 கோடி வரி பாக்கி இதுவரை வரவில்லை. அதனால் தற்போது தமிழக அரசுக்கு நிதி பற்றாக்குறை உள்ளது. அந்த பற்றாக்குறையை போக்க ரூ.6000 கோடி வரி பாக்கியை தர மத்திய அரசு தயாராக உள்ளதா? அதை கொடுத்தால் மாநில அரசு பெட்ரோல் மீதான வரி குறைப்பை பரிசீலிக்கும்” என தெரிவித்தார்.