அமைச்சர் ஜெயக்குமார் ஆடியோ விவகாரம்: டிடிவி கட்சி பிரமுகர் கைது

தாராபுரம்:

மைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக அவதூறு செய்தி பரப்பியதாக தாராபுரம் அம்மா மக்கள் முன்னனேற்றக் கழக நிர்வாகி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சல் ஜெயக்குமார் மீது சென்னை பிராட்வேயை சேர்ந்த இளம்பெண் சிந்து என்பவர் பாலியல் புகார் கூறி உள்ளார். அவர் பேசியதாக சில ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஆதாரமாக  பிறப்பு சான்றிதழும் வெளியானது.

டிடிவி ஆதரவாளர் வெளியிட்ட மீம்ஸ்

இதுகுறித்து விளக்கம் அளித்த ஜெயக்குமார்,  ‘அது தன்னுடைய குரல் அல்ல. ‘மார்பிங்’ செய்யப்பட்டிருக்கிறது.’ என்று மறுத்தார். ஆனால்,  டிடிவி ஆதரவாளரான  வெற்றிவேல், சிபாரிசுக்காக சென்ற அந்த பெண்ணுக்கு, மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து அமைச்சர் ஜெயக்குமார் கற்பழித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் தாயாருக்கு  தெரிய வந்ததும்,  ‘உங்கள் மகளை தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன்’ என்று அமைச்சர் வாக்கு கொடுத்து, பல முறை அந்த பெண்ணுடன் அவர் ஒன்றாக இருந்துள்ளார் என்றார். அம்மா (ஜெயலலிதா) அப்பல்லோ  ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என நாங்கள் எல்லாம் அழுது கொண்டிருந்தபோது, அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சார நேரத்தில் திண்டுக்கலில் உள்ள ஓட்டல் ஒன்றில், அந்த பெண்ணுடன் அமைச்சர்  ஜெயக்குமார் தங்கியிருந்தார்’ என்றும்,ஹோட்டல் பெயர், அறை எண், ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்க ளும் தன்னிடம் இருக்கிறது. என்று கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த பிரச்சினையை சட்டப்படி சந்திப்பேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறிய நிலையில், ஆடியோவில் பேசிய சிந்து என்ற பெண்,  தேசிய மகளிர் ஆணையத்தில்  புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற இணையதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  அமைச்சர் ஜெயகுமார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக  ஓமலூரை அடுத்த தாராபுரம் பகுதியை  சேர்ந்த அம்மா மக்கன் முன்றேற்றக்கழக  நிர்வாகி ரங்கநாதன்  என்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.