சென்னை,

மிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவரும், ஓபிஎஸ் அணியை சேர்ந்தவருமான மதுசூதனனை பெருச்சாளி என்று விளித்து பேசினார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று   செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன்,  ஈபிஎஸ் அணியினர் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து காலி செய்ய பார்க்கிறார்கள் என்றும்,  சசிகலாவிடம் பெற்ற பணத்திற்கு நாஞ்சில் சம்பத் விசுவாசமாக இருக்கிறார் என்று கூறினார்.

மேலும்,  ஈபிஎஸ் அணியிலிருந்து திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமாரை வெளியேற்ற வேண்டும். அவர்கள் இருவரும் தான் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது,

நடைபெற இருக்கும்ஜி .எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீநகர் செல்வதாக கூறினார். அதிமுக இரு அணிகள் இணைவது குறித்து நானாக எந்த கருத்தையும் சொல்வதில்லை. யாராவது கருத்து சொன்னால், அதற்கு பதில் தருகிறோம் என்றார்.

மதுசூதனன் நேற்றைய பேட்டி குறித்து கேட்கப்பட்டபோது, அவர் ஒரு பெருச்சாளி என்றும்,  அமாவாசை இருட்டில் பெருச்சாளி புகுவது தான் வழி என்பது மதுசூதனனுக்கு பொருந்தும் என்றும் கூறினார்.

மேலும், ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தை கூறி ஓ.பி.எஸ்., அணியினர்தான் தங்களை  பதிலளிக்க தூண்டுகின்றனர் என்றும்,  ஓ.பி.எஸ்., அணியை போன்று நாங்கள் தரம் தாழ்ந்து பேசுவது கிடையாது. பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவது ஓ.பி.எஸ்., தரப்பினர் தான். நாங்கள் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.