சென்னை:

ற்கொலை செய்த கால்டாக்சி ஓட்டுநர் ராஜேஷுக்கு ஐ.நா.வில் சிலை வைக்க போவதில்லை என்றும், அவரை நினைத்து யாரும் 365 நாட்களும் அழுது கொண்டிருப்பதில்லை என்று  அமைச்சர் ஜெயக்குமாரின் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கால்டாக்சி ஓட்டுனர் ராஜேஷ்

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள், காவல்துறை யினரின் தொல்லை காரணமாக  கால் டாக்சி ஓட்டுனர் தற்கொலை மற்றும், கால் டாக்சி டிரைவர்களின் வேலைநிறுத்தம் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதில் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,  போலீஸ் தரக்குறைவாக பேசியிருந்தால் உயரதிகாரிகளை அணுகி ராஜேஷ் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு இப்படி தற்கொலை செய்து கொண்டது சரியல்ல.

தற்கொலை செய்து கொண்டதால் அவரது குடும்பம்தான் பாதிக்கப்படுமே ஒழிய அவருக்கு ஐ.நாவில் சிலை வைக்கப்போவதில்லை என்றும்,  365 நாட்களுக்கு ராஜேஷை நினைத்து யாரும் அழுது கொண்டிருப்பதில்லை என்று அங்காரமாக கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 25ந்தேதி கால்டாக்சி டிரைவர் ராஜேஷ் என்பவர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணம் குறித்து அவர் பதிந்திருந்த வீடியோவில், போக்குவரத்து போலீஸார் தன்னை தரக்குறைவாக திட்டியதால்தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சரின் ஜெயக்குமாரின் அகங்கார பதில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.