சென்னை

மைச்சர் ஜெயக்குமார் “கருணாநிதியின் மகள் கனிமொழி, கார்பரேட் தரகர் நீரா ராடியாவுடன் பேசிய போன் உரையாடல் பற்றி சட்டசபையில் அனுமதி மறுத்தது ஏன்?” என்று  கேள்வி எழுப்பி உள்ளார்.

தங்களை ஆதரிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கு பத்து கோடி வரை தருவதாக சசிகலா தரப்பு தெரிவித்ததாக அதிமுக எம்.எல்.ஏ. சரவணன் பேசியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சட்டசபை துவங்கியவுடன் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இது குறித்து இன்று கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “கருணாநிதியின் மகள் கனிமொழி, கார்பரேட் தரகர் நீரா ராடியாவுடன் பேசிய போன் உரையாடல் பற்றி சட்டசபையில் அனுமதி மறுத்தது ஏன்?” என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

மேலும், “கனிமொழி நீரா ராடியா உரையாடல் குறித்து பேச அனுமதி மறுத்தவர்களுக்கு தற்போது பேச எந்த தகுதியும் இல்லை” என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.