தமிழகத்தில் திமுக, அதிமுகவைப் பற்றி பேசாவிட்டால் எந்த கட்சியும் போணியாகாது: கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி:

மிழகத்தில் திமுக, அதிமுகவைப் பற்றி பேசாவிட்டால் எந்தி கட்சியும் போணியாகாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கி உள்ள  நடிகர் கமல்ஹாசன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதற்காக மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களையும், விவசாயிகளையும், கல்லூரி மாணவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.

அதுபோல ரஜினி தொடங்கி உள்ள மக்கள் மன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர்கள் பொதுவாக திராவிடக் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டையும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ,  தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் திமுக, அதிமுக பற்றி பேசாவிட்டால் அவர்களது கட்சி போணியாகாது என்பது அவர்களுக்கு தெரியும். இதில் கமல்ஹாசன் மட்டும் விதிவிலக்கு அல்ல.
அதிமுக, திமுகவின் அரசியல் நிலைப்பாட்டில்தான் தமிழக அரசியல் பயணிக்கும் என்றும் வேறு யாரும் இங்கு நீடிக்கவோ, நிலைக்கவோ முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.