கால் மிதியடியாக இந்திய தேசிய கொடி விற்பனை: அமேசானுக்கு சுஸ்மா கண்டனம்

டெல்லி:

இந்திய தேசிய கொடியை போன்று கால் மிதியடி விற்பனை செய்யும் அமேசான் அதிகாரிகளின் விசாவை ரத்து செய்வோம் என்று சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய கொடியை போன்ற கால் மிதியடிகை அமேசான் விற்பனை செய்வதாக டுவிட்டர் மூலம் வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ்க்கு தகவல் அளிக்கப்பட்டது.

 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர். இதற்காக அமேசான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். நாட்டின் தேசிய கொடியை அவமதிக்கும் அத்தகைய பொருட்களை திரும்ப பெற வேண்டும். இதை செய்யவில்லை என்றால் அமேசான் அதிகாரிகளுக்கு இந்திய விசா வழங்கப்படமாட்டாது. ஏற்கனவே வழங்கப்பட்ட விசாவையும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமேசான் என்பது சந்தைப்படுத்தும் ஓரு இடம். அது நேரடியாக எவ்வித பொருட்களையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது கிடையாது. இந்த விவகாராத்தை கனடாவில் உள்ள இந்திய தூதர் மூலம் அமேசான் கவனத்துக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.