ராகிங் மாணவர்களின் சான்றிதழில் தண்டனை விபரம் இடம்பெறும்…..உயர்கல்வி அமைச்சர்
சென்னை:
ராகிங் செய்யும் மாணவர்களின் சான்றிதழ்களில் தண்டனை விபரம் குறிப்பிடப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
சென்னையில் ராகிங் தடுப்புக் குழு ஆய்வுக் கூட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ராகிங் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும்.
ராகிங்கை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராகிங் கண்காணிப்புக் குழு இல்லாத கல்லூரிகளில் குழு அமைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.