சென்னை: மறைந்த பின்னணி பாடகர்எஸ்.பி.பி. உடலுக்கு தமிழகஅரசு சார்பில் அமைச்சர் பாண்டியராஜன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து எஸ்.பி.பி குடும்பத்தினர் இறுதி மரியாதை செய்தனர். அதைத் தொடர்ந்து  இறுதிச்சடங்குகள் நடைபெற்று வருகிறது.

40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பாடல்கள் பாடி, பல கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் எஸ்.பி.பி.  அவரது மறைவு இந்திய திரையுலகக்கு பேரிழைப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு  சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

நேறு மாலை 4 மணி முதல் அவரது நுங்கம் பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல் நேற்று இரவு 8 மணிக்கு சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பண்ணை வீட்டில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு இன்று காலை 11 மணிக்கு மேல் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

முன்னதாக இன்று காலை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் வந்துள்ளனர். பாடகர் மனோ, இயக்குனர்கள் அமீர், பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இயக்குனர் பாரதிராஜா, பாடகர் மனோ உள்ளிட்ட பலர் நேரில் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்தினர். பிரபலங்கள் பலர் வந்திருந்தாலும், பொதுமக்கள் அதிகம் கூடிவிடக்கூடாது என்பதற்காக போலீசார் குறைந்த நபர்களை மட்டுமே அனுமதித்து உள்ளனர். உறவினர்கள் மட்டுமே எஸ்பிபி உடல் அருகில் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட கண்ணீர் மல்க இரங்கல் கூறி வருகின்றனர்.

எஸ்.பி.பி.யின் உடலுக்கு தமிழகஅரசு சார்பில் அமைச்சர் பாண்டியராஜன் நேரில் வந்து மரியாதை செலுத்தினார்.

அதுபோல, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேரில் மரியாதை செலுத்தினார்.

 ஆந்திர அரசு சார்பில்  எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்குஅமைச்சர் அனில்குமார் யாதவ் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இறுதியாக  அவரது மகன் எஸ்.பி.பி.சரண், சகோதரி சைலஜா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் இறுதி மரியாதை செய்தனர். அதைத் தொடர்ந்து, இறுதிச்சடங்குகளை செய்து வருகின்றனர். இதன் பிறகு இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்படும்