ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு பதவி: தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?

சென்னை:

மிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நடைபெறும் என்று தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையை மாற்றம் செய்ய முதல்வர் எடப்பாடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மேலும் சிலருக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து,  புதிய அமைச்சர்களாக சேலம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்ச செம்மலை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன், சதன் பிரபாகரன் ஆகியோருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என தலைமைச் செயலகத்தில் தகவல்கள் உலா வருகின்றன…

குறிப்பிடப்பட்டுள்ள 3 பேரும் தீவிர ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்பதும், ஓபிஎஸ் தனியாக நின்றபோது அவருக்கு ஆதரவாக அவருக்கு விசுவாசமாக செயல்பட்டு வந்த காரணத்தால், ஓபிஎஸ் தரப்பினை சமாதானப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.