டெல்லி: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை இறுதியானது அல்ல என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார்.

இந்தியாவில் தற்போது, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 என்ற நடைமுறை உள்ளது.  சுற்றுச்சூழல் ஆபத்து ஏற்படுத்தும் திட்டம் என்றால் அதற்கு அனுமதி மறுக்கவும் ,ஆபத்து ஏற்படுத்தாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்குவதும் குறித்து அரசு அமைத்த குழு ஆய்வு செய்யும்.

ஆனால்  புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு ஒன்றை மார்ச் 12ம் தேதி மத்திய அரசானது, சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 என்ற பெயரில் வெளியிட்டது. ஆனால் இந்ம  வரைவிற்கு  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தேசிய அளவில் ஒரு விவாத பொருளாக மாறி உள்ளது. இந் நிலையில் இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிவிக்கை இறுதியானது அல்ல.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தேவையற்றது என்று கூறி உள்ளார்.