23ம் புலிகேசியாக வைகைச செல்வனும் "மங்குனி"அமைச்சராக ராஜேந்திரபாலாஜியும் ( ஏதோ, நம்மால் ஆனது!)
23ம் புலிகேசியாக வைகைச செல்வனும் “மங்குனி”அமைச்சராக ராஜேந்திரபாலாஜியும் ( ஏதோ, நம்மால் ஆனது!)

சென்னை:

23ம் புலிகேசி திரைப்படத்தில் மன்னராக வரும் வடிவேலு, தனது அமைச்சரை முட்டாள் என்னும் பொருள் படும்படியாக “மங்குனி அமைச்சரே” என்று அழைப்பார்.  “மணிக்கொரு  தடவை மங்குனி அமைச்சர் என்பதை நிரூபித்துககொண்டே இருப்பீரே..” என்று சாடுவார்.

ராஜேந்திர பாலாஜி

அதைப்போல அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், அதே கட்சியின் இன்னாள் அமைச்சரான ராஜேந்திரபாலாஜியை “மங்குனி அமைச்சர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி தரம்தாழ்ந்து பேசுவது சமீபகாலமாய் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தனியார் பால் பவுடரில் காஸ்டிக் சோடா கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார். அப்போது வைகைச்செல்வனையும் சீக்கு வந்த பிராய்லர் கோழி அழுகிய தக்காளி என்றெல்லாம் கீழ்த்தரமாக விமர்சித்தார்.

பால் கலப்படம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டுவதை குறித்து வைகைச் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தனியார் பாலில் கலப் படம் என்று ‘மைக்’ முன்பாக மட்டும் பேசுவதை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். தான் வகிக்கும் துறையில் கடந்த ஓராண்டாக அவர் என்ன செய்து

வைகைச் செல்வன்

கொண்டிருந்தார்?. ஏன் இதுவரை வெளியில் சொல்லவில்லை. ராஜேந்திர பாலாஜி ஒரு மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறார்.

தன் வீட்டில் இருவர் இறந்து போனதற்கு பாலால் ஏற்பட்ட புற்றுநோய்தான் காரணமா? என்றெல்லாம் மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதைப் போக்க வேண்டியது அவரின் கடமை. மணிக்கொருதரம் ஒரு அமைச்சர் தனக்கு மிரட்டல் வருகிறது என்று பகிரங்கமாக சொல்வதன் மூலம், தான் அங்கம் வகிக்கும் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று தானே வாக்குமூலம் கொடுப்பதைக்கூட புரிந்து கொள்ளாதவராக இருக்கிறார் என்று  பேசிக் கொள்கிறார்கள்: இவ்வாறு வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.