ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: கமல் கட்சி அறிக்கை

சென்னை:

ந்து தீவிரவாதம் குறித்து பேசிய  கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை,  அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், அங்குள்ள இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதியில் வாக்கு சேகரித்தபோது,  சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே, அவர் இந்து தீவிரவாதி என கூறினார். கமலின் கருத் துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவரது கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அவர் பேசி தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்றும் பாஜக மற்றும் பல இந்து அமைப்பினர் புகார் கூறி உள்ளனர். மேலும் கமலுக்கு எதிரான போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்று தூத்துக்குடியில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.  சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசி இருக்கிறார். அவரது கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும் என்று கடுமையாக  விமர்சித்திருந்தார்.

அமைச்சரின் பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கும் நடுநிலையாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்கம் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது கண்டனத்திற்குரியது. பதவிப்பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்ததற்காக அமைச்சர் பதவியிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Kamalhassan, rajendrabalaji
-=-