சத்துணவு ஊழியர்களுடன் அமைச்சர் சரோஜா பேச்சு வார்த்தை: முடிவு எட்டப்படுமா?

சென்னை:

மிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்த சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரையறுக்கப்பட்ட ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் , ஓய்வு பெறும்போது அமைப்பாள ருக்கு ரூ. 5 லட்சம், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும். 20,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய நியாயமான கோரிக்கைளை அரசு நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கடந்த 25-ம் தேதி முதல்  தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

இதன் காரணமாக பள்ளிகளில் சத்துணவு சமைக்கும் பணி தடை பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் 100நாள் வேலை திட்ட ஊழியர்களை கொண்டு சமையல் செய்து பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சத்துணவு பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, சஙக நிர்வாகிகளுடன்  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், சத்துணவு பணியாளர் சங்கத்தின் தலைவர் சுந்தராம்பாள் உள்பட 13 பேர் பங்கேற்று, அமைச்சர் சரோஜாவிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசி வருகின்றனர்.

பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.