கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ…

மதுரை:
மிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு க்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுட சிகிச்சை பெற்ற வந்த நிலையில், அவருக்கு முழுமையாக குணமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அமைச்சர்களில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், உயர்கல்வித் துறைஅமைச்சர் கே.பி.அன்பழகன்  குணமடைந்துவீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், தற்போது அமைச்சர் செல்லூர் ராஜுவும் குணமடைந்துள்ளார்.

தற்போதைய நிலையில், மின்துறை அமைச்சர் தங்கமணி, அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலை யில், தொடர்ந்து அமைச்சருக்கும் தொற்று உறுதியானது. அவர்கள் சென்னை மியாட் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்தநிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து  முழுமையாக குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.