அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் அனுமதி…

மதுரை:
மிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்,  அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு  இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆனால்,  அவரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுக்கு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு  கொரனா தொற்று பரிசோதனை  செய்யப்பட்டது. அதன் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில், அமைச்சருக்கு கொரனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. ஆனால் அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து, அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி