எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு காய்ச்சல் வந்தால் தேர்வில் விலக்கா…? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

சென்னை: காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, 11ம் தேதி 11ம் வகுப்பு மற்றும் 18ல் 12 ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வுகள் தொடங்க உள்ளன. ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுடன் 2 முகக்கவசங்களும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: 10ம் வகுப்பு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும், மாணவர்கள் 9.45 க்கு வரவேண்டும் என்றார்.