சென்னை,

முதல்வர் எடப்பாடி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் தங்கமணியை அதிரடியாக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் பி.தங்கமணி நீக்கப்படு வதாகவும் அவருக்கு பதிலாக  நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளராக எம்.அழகப்பன் நியமிக்கப்படுவதாகவும்  டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

எடப்பாடி ஆதரவு பல்வேறு மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளின் பதவிகளை தொடர்ச்சியாக பறித்து, அந்த பதவிகளுக்கு தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார் டிடிவி தினகரன்.

இந்நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடியை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.  அதைத்தொடர்ந்து தற்போது, அமைச்சர் தங்கமணியையும் நீக்கி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.