மதுரை: மதுரையை 2வது தலைநகராக்க தமது பதவியை துறக்கவும் தயார் என்று அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளார்.

தமிழகத்தில் இப்போது 2வது தலைநகரம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற பேச்சுகள் வெகுவாக எழுந்துள்ளன. தென் தமிழகத்தின் முக்கிய மாவட்டமாக மதுரையை 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் தொடர்ந்து கூறி வருகிறார்.

இதே கருத்தை மற்றொரு அமைச்சரான செல்லூர் ராஜூவும் வலியுறுத்தி வருகிறார். திருச்சியை 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்து வருகின்றார். இதில் அமைச்சர் உதயகுமார் கருத்து அவரது சொந்த கருத்து, அரசின் கருத்தல்ல என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்திவிட்டார்.

இந் நிலையில்  மதுரையை 2வது தலைநகராக்க தமது பதவியை துறக்கவும் தயார் என்று அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளார். மதுரையில்  செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் அனைவருக்கும் இ பாஸ் தரப்படுகிறது. இரு மொழி கொள்கை தான் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. பதவியை விட தென் தமிழக வளர்ச்சிதான் முக்கியம்.

பதவியா? வளர்ச்சியா? என்று முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ கேட்டால் பதவியை துறக்க தயார். தமிழகத்தின் வளர்ச்சி, தென்தமிழகத்தின் வளர்ச்சி, மதுரையின் வளர்ச்சி என்று கூறினார்.