சாலை விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்ட அமைச்சர்: அதிமுக வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு

வேலூரில் சாலை விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு அமைச்சர் கே.சி.வீரமணி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

வேலூர் மாவட்டம் நெமிலி பகுதியில் முதலமைச்சர் சிறப்புக் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற வருமான வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி, ராணிப்பேட்டை நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, கரியாகுடல் பகுதியைச் சேர்ந்த கோட்டி என்பவர், சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் வரா‌ததால் சாலையோரம் கிடந்தார்.

அவரை கண்டதும், தமது காரை நிறுத்திய அமைச்சர் வீரமணி, உடனடியாக அவரை‌ மீட்டு, அதிமுகவினரின் வாகனத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.