டில்லி:

டில்லியில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்திற்கு உள்ளாட்சி அமைப்புக்கான நிதி ரூ.4,976 கோடி வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.

டில்லியில் நடைபெற்ற உள்ளாட்சித் துறை கூட்டத்தில் பங்கேற்க சென்ற தமிழக உள்துறை அமைச்சர் அங்கு  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய நிதி ஆணையத்தின் மூலம் தமிழகத்திற்குரிய செயலாக்க மானியமான ஆயிரத்து 196.26 கோடி ரூபாயையும,  அடிப்படை மானியமான 3ஆயிரத்து 780.81 கோடி ரூபாயையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் மும்பை – பெங்களூரு இண்டஸ்ட்ரியல் காரிடார் திட்டத்தை கோவை வரை விரிவு படுத்த கோரியும், கோவையில் இருந்து டெல்லிக்கு தினசரி விமான சேவையை வலியுறுத்தியும் நீர்மலா சீதாராமனிடம் அவர் கோரிக்கை மனு அளித்தார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்த முன்வராத நிலையில், உள்ளாட்சிக்கான நிதியை மத்தியஅரசு வழங்க மறுத்து வருகிறது. இதன் காரணமாக வளர்ச்சி பணிகள் முடங்கிப் போய் உள்ளன. இந்த நிலையில், உள்ளாட்சிக்கான நிதியை விடுவிக்க தமிழக அமைச்சர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.