செய்தியாளரை விமர்சித்த அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தம்

சென்னை:

நேற்று மாலை காவிரி மேலாணம் வாரியம் அமைக்கக்கோரி நடைபெற்ற சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் செய்தியாளர்கள் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,  அவரது கேள்விக்கு பதில் அளிக்காமல் அவரை  “அழகாக இருக்கிறீர்கள்” என  திரும்பத் திரும்பக் கூறினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு செய்தியாளர்கள்  கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,  அனைத்து செய்தியாளர்களையும் தான்  சகோதர சகோதரிகளாகவே பார்ப்பதாக தெரிவித்தார்.

மேலும், அரசியல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே பெண் செய்தியாளரை அழகாக இருப்பதாக கூறியதாகவும்,  யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

மேலும், அந்த  சம்பவத்திற்காக தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும்  அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி