அமைச்சர் விஜயபாஸ்கர், கீதாலட்சுமி இன்று மீண்டும் வருமானவரி அலுவலகத்தில் ஆஜர்

சென்னை,

டந்த 7ந்தேதி நடைபெற்ற வருமான வரி சோதனையை தொடர்ந்து ஏற்கனவே வருமான வரி அலுவலகத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் ஆஜராகினார்.

இந்நிலையில் இன்று மீண்டும் ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. அதைத்தொடர்ந்து இன்று மீண்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக பணபட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் காரணமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி., சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து வருமானவரித்துறை சம்மன் அனுப்பியதை தொடர்ந்து  நுங்கம்பாக்கத்திலுள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு இயக்குனர் அலுவலகத்தில்  அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

ஆனால் மேலும் விசாரணை செய்ய வேண்டும் என்று  வருமானவரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. இதன் காரணமாக இருவரும் இன்று (ஏப்ரல் 17) நேரில் ஆஜராக உள்ளனர்.

ஏற்கனவே இவர்கள்மீது பல புகார்கள் கூறப்பட்டுள்ளதால் அவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் போர்க்கொடி தூக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.