நாளை தமிழக பந்த் இருந்தாலும் பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாளை நடத்த உள்ள முழு அடைப்பின் போது பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற உள்ள இந்த முழு அடைப்பில் இரு வணிக சங்கங்களும் கலந்துக் கொள்ளும் என அறிவித்துள்ளது.   மேலும் பாண்டிச்சேரி அரசு முழு அடைப்பை முன்னிட்டு நாளை பேருந்துகள் இயங்காது என அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர், “நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள்ன.   முழு அடைப்பு நடந்தாலும் பேருந்துகள் இயக்கப்படும்.   தமிழக பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதால் அரசு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது”  என தெரிவித்துள்ளார்.