வருமானவரி அலவலகத்தில் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கப்போகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். இது அவரை விட வருமானவரி அதிகாரிகளுக்கே அதிக டென்சனை ஏற்படுத்தும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

விஜயபாஸ்கரின் வீடு,  அலுவலகம், உறவினர் – நண்பர்கள் வீடுகள் என்று பல இடங்களில் வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

ரெய்டின் போது கைப்பற்றப்பட்டதாகக் கூறி சில ஆவணங்கள்  தொலைக்காட்சிகளில் வெளியாகின.

அந்த ஆவணங்களில் ஆர்.கே நகர் தொகுதியில் முதல்வர் உள்ளிட்ட 6 அமைச்சர்கள், 89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை… யார் யாருக்கு எவ்வளவு பணப் பட்டுவாடா செய்தார்கள்…’ என்பது போன்ற விவரங்கள் .

“அது போலியான ஆவணம். இதை வெளியிட்டு ஆர்.கே. நகர் தேர்தலை நிறுத்த சதி செய்கிறார்கள்” என்றார் விஜயபாஸ்கர்.

தற்போது தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க.. வருமானவரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியதன் பேரில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் ஆஜராகிறார் விஜயபாஸ்கர்.

இன்று தான் ஆஜராவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இன்று நடக்கப்போதும் வருமானவரி விசாரணையில் விஜயபாஸ்கரைவிட, வருமானவரித்துறை அதிகாரிகள்தான் டென்சன் ஆவார்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

இப்படிச் சொல்ல காரணம் இருக்கிறது.

விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது அல்லவா?

அப்போது ஆவணம் ஒன்றை கைப்பற்றிய அதிகாரிகள், “இதில் குறிப்பிட்டுள்ள பணத்தை யார்  யாருக்கு அளித்தீர்கள்” என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு  விஜய பாஸ்கர், “நான் உண்மையைச் சொல்கிறேன். அப்படியே பதிவு செய்துகொள்வீர்களா” என்று கேட்டிருக்கிறார்.

அதிகாரிகளும், “’சொல்லுங்கள்.. அப்படியே பதிவு செய்கிறோம். தவிர, சொல்லிவிட்டால்  உங்களை விட்டுவிடுகிறோம்” என்றார்களாம்.

அதற்கு புன்சிரிப்புடன் விஜயபாஸ்கர் “இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அத்தனை பணத்தையும் நான் ஓ.பன்னீர்செல்வத்திடம்தான் கொடுத்தேன்!” என்று கூலாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்த பதிலைக் கேட்டு அதிகாரிகள் ஏகத்துக்கு டென்சன் ஆகிவிட்டார்களாம்.

வீட்டில் வைத்து அதிகாரிகள் கேட்ட கேள்விகள் பலவற்றுக்கு இப்படி கூலாக – அதாவது – கோக்குமாக்காகத்தான் விஜயபாஸ்கர் பதில் அளித்தராம்.

ஆகவேதான், இன்று வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராக இருக்கும் விஜபாஸ்கர்  தங்களது கேள்விகளுக்கு எப்படியெல்லால்  எக்குதப்பாக பதில் அளித்து டென்சனை ஏற்படுத்தாவாரோ என்ற டென்சனில் (எத்தனை டென்சன்!) இருக்கிறார்களாம்.