சென்னை

மிழகத்தில் நடைபெற உள்ள 10 ஆம் வகுப்புத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பைத் தமிழக அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஜூன் 1 முதல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.   இந்த வழக்கு ஒரு வழக்கறிஞரால் பொது நல வழக்காக தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்துப் பெற்றோர் மற்றும் மாணவாகள் வழக்கு தொடராமல் வழக்கறிஞர் தொடர்ந்தது குறித்து கேள்வி எழுப்பியது.  இந்த வழக்கை மனுதாரர் திரும்பப் பெற அனுமதி கோரினார்.  இதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் இன்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “வரும் 18 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம்  நடைபெற உள்ளது.  அதன் பிறகு 10 ஆம் வகுப்புத் தேர்வுக்கான நுழைவு சீட்டு வழங்குவது குறித்து அறிவிக்கப்படும்.

 தற்போது கொரோனா பாதிப்பு காரணமாகப் பல பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன.  இந்த பகுதிகளில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக அந்தப் பகுதிகளுக்குள்ளேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன” என அறிவித்துள்ளார்.