உங்கள் மேலதிகாரியிடம் விடுமுறை கேளுங்கள் : அமைச்சரின் மகள் வேண்டுகோள்

டில்லி

த்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவின் மகள் தனது தந்தை அவருடைய மேல் அதிகாரியிடம் ஒரு நாள் விடுப்பு கேட்குமாறு சொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவுக்கு வயது 47 ஆகிறது.   அவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.   வயதில் மிகவும் சிறியவரான அந்தப் பெண் தனது தந்தையை தனது பள்ளிக்கு வர வேண்டும் என அழைத்துள்ளார்.  வேலைப்பளு காரணமாக அவரால் வர இயலவில்லை.   அதை ஒட்டி அவர் தனது தந்தையிடம் பேசும் வீடியோ டிவிட்டரில் வெளியாகி வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில் அந்தப் பெண், “அப்பா, நாளை எனது பள்ளியில் தாத்தா பாட்டி தினம்.  அம்மா எனது பள்ளிக்கு அடிக்கடி வருகிறார்.   எனது படிப்பு, நடனம் அனைத்தையும் பார்க்கிறார்.  குறிப்பாக எனது மீன் நடனம்.   ஆனால் நீங்கள் எனது பள்ளிக்கு வருவதே கிடையாதே.  அது ஏன் ?  எனது தாத்தா பாட்டி கூட நெடுந்தொலைவு உள்ள ஊரிலிருந்து டில்லிக்கு வருகின்றனர்.” என கேட்கிறார்.

அதற்கு அமைச்சர்.  “சரிம்மா, நான் வர முயற்சி செய்கிறேன்.  ஆனால் நான் சமீப காலமாக மிகவும் பிசியாக இருக்கிறேன்.  நான் என்ன செய்ய?” என கேட்கிறார்.

அதற்கு அந்த பெண், “உங்கள் அலுவலக மேல் அதிகாரியிடம் நீங்கள் உங்கள் மகள் பள்ளிக்கு அவசியம் செல்ல வேண்டும் என சொல்லுங்கள்.  அவர் உங்களை மன்னித்து விடுப்பு அளிப்பார்.” என கூறுகிறார்.

இந்த வீடியோ பதிவு 600 முறை மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.   அந்த குழந்தையின் பதிலுக்கு சுமார் 3000 டிவிட்டர் உபயோகிப்போர் பதில் அளித்துள்ளனர்,

You may have missed