சென்னை,

மைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அதிரடி பேச்சு காரணமாக தமிழக அரசு ஆட்டம் கண்டு வருவ தாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக  ரசாயணம் கலந்துள்ளது என்று கொளுத்தி போட்டார்.

இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பாலில் ராசாயணம் கலந்துள்ளது என்று தெரிய வந்தால், உடனே நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று  பொதுமக்களும், நெட்டிசன்களும் அமைச்சர் குறித்து   சரமாரியாக விமர்சித்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,  தனியார் நிறுவனங்களின் பால் புனே மற்றும் கிண்டி ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், மாதவரம் பால்பண்ணையில் நடத்தப்பட்ட சோதனையில் தனியார் பாலில் ரசாயணம் இருப்பது உறுதியானது என்று  மீண்டும் பேசி பரபரப்பை  அதிகமாக்கினார்.

மேலும், தனியார் பாலில் கலப்படம் குறித்து விசாரணை நடத்த 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள தாகவும்  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  கூறினார்.

இதையடுத்து தனியார் பால் நிறுவனங்களும் விளக்கம் அளித்தன.

மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ‘ஹெரிடேஜ்’ பால் நிறுவனம், தங்களுடைய நிறுவனத்தின் பாலை சோதிக்கலாம்.. என்றும் ‘சோதனைக்கு நாங்கள் தயார்’  என்று சவால் விடுத்தது.

இதற்கிடையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியபடி, தங்களுக்கு தமிழக அரசிடம் இருந்து எந்தவித பாலும் சோதனைக்கு வரவில்லை என்று புனே ஆய்வக டைரக்டர் கூறி பரபரப்பை உண்டாக்கினார்.

இதன் காரணமாக அமைச்சர், பாலை சோதனைக்கு அனுப்பியதாக கூறியது பொய் என் தெரிய வந்தது.

தனியார் நிறுவனங்களிடம் இருந்து கையூட்டு பெறவே அமைச்சர் பொய்யான குற்றச்சாட்டுக் களை கூறி வருவதாக பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின்  பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாரதியஜனதா மேலிட தலைவர்களிடம் புகார் கூறியதாகவும், அதைத்தொடர்ந்து டில்லியில் இருந்து தமிழக முதல்வருக்கு அறிவுறுத்தல் வந்துள்ளதாகவும்  கோட்டையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையடுத்து அமைச்சரை அழைத்து பேசிய முதல் எடப்பாடி, பாலில் கலப்படம் குறித்த பிரச்சினையில் அமைதி காக்கும்படியும்,  ஒவ்வொரு நாளும் ஆட்சியை நகர்த்துவதற்கே பெரும் கஷ்டமாக இருப்பதாவும், தற்போது நடைபெற்று வருவது ஜெயலலிதா ஆட்சி அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கண்டித்ததாகவும் அதிகாரிகள் மட்டத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

சென்னையில் விற்பனையாகும் தனியார் பால் நிறுவனங்களில், ஆந்திராவில் இருந்து வரும் ஹெரிடேஜ் பால் நிறுவனமும் பெரும்பங்கு விற்பனை செய்து வருகிறது. அந்த நிறுவனம் ஆந்திர முதல்வர் சந்திரபாயு நாயுடு உடையது என்பது உங்களுக்கு தெரியாதா? என்று அமைச்சரை கண்டித்ததாகவும், பால் பிரச்சினையில் சந்திரபாபு நாயுடு, தமிழக அரசு மீது கோபமான நிலையில் இருப்பதாகவும், ஆகவே, இடம் பொருள் ஏவல் பார்த்து பேசுங்கள் என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.

தனி ஒரு மனுஷியால் மத்தியஅரசையே ஆட்டுவித்த ஜெயலலிதா அமர்ந்த இடத்தில் இருந்து தமிழக முதல்வர், பக்கத்து மாநில முதல்வருக்கு பயந்து நடுங்கி ஆட்சி செய்துவரும் முதல்வரின் திறமை குறித்து கோட்டை வட்டார அதிகாரிகள் வட்டடாரம் சிரிப்பாய் சிரிக்கிறதாம்.