கமல் மீதான அமைச்சர்கள் தாக்குதல் நாகரீகமில்லை!: வைகோ

ரோடு:

மிழக அரசை விமர்சித்த நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் விமர்சிக்கும் விதம் நாகரீகமற்ற வகையில் உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நேற்று வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடிகர் சிவாஜிக்கு பிறகு கலையுலகில் தலைசிறந்த நடிகர் என்ற இடத்தில் கமலஹாசன் இருக்கிறார். கமல் உட்பட யாருக்கும் கருத்துச்சொல்ல உரிமை உண்டு.

அரசு குறித்து கருத்துச்சொல்லும் கமல் மீது அமைச்சர்கள் வார்த்தைகளால் தாக்குவதும், எச்சரிக்கை செய்வதும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். அமைச்சர்களின் பேச்சு நாகரீம் அற்ற வகையில் உள்ளது.

இதுபோல பேசுவதை அமைச்சர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று வைகோ தெரிவித்தார்.