மதுரை,

னக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களை அமைச்சர்கள் மிரட்டுகிறார்கள் என்று டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கட்சிப் பொறுப்பிலிருந்து என்னை எடப்பாடி பழனிசாமி நீக்க முடியாது என்றும், எனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களை அமைச்சர்கள் மிரட்டி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து இரண்டாக  பிரிந்த அதிமுகவில், சசிகலா தலைமையிலான   அதிமுக அம்மா அணியும் இரண்டாக உடைந்து,   உச்சக்கட்ட மோதல் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக கடந்த வாரம்  எடப்பாடி தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து  இரு தரப்பினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்ததை தொடர்ந்து, இன்று மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்துக்கு டிடிவி தினகரன் ஏற்பாடு செய்துள்ளார்.

தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, தமிழகத்தில் 9 இடங்களில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

அதன்படி முதல் பொதுக்கூட்டம் மேலூரில் நடைபெறவுள்ளது.  தினகரனால் கழக அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்ட, மேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமி தலைமையில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்துக்கான  மேடையானது அதிமுக தலைமை அலுவலகம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை மூலம், காவல்துறை அனுமதி பெற்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் தனக்குத்தான் அதிமுகவினர் ஆதரவு என்று தெரிவிக்கும் வகையில், தென் மாவட்டங்களில் இருந்து ஆள்பிடிக்கும் வேலை சில நாட்களாக நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு ரூ.1000 வீதம் தரப்படுவதாக கூறி கிராமப்பகுதிகளில் இருந்து மக்களை கூட்டிப் வரப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,   கட்சிப் பொறுப்பிலிருந்து என்னை எடப்பாடி பழனிசாமி நீக்க முடியாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

பிரமாணப்பத்திரத்தில் எனது பெயரைத்தான் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக கூறி யுள்ளனர் என்றும் விரைவில் எடப்பாடியின் பொய் வெளிப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் விருப்பம்போல் செயல்படுவதற்காக அதிமுக தொண்டர்களை எடப்பாடி அணி ஏமாற்று கிறார்கள், எனக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களை அமைச்சர்கள் மிரட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இடையூறுகளை கடந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.