மந்திரி வீட்டு ரெய்டின்போது மந்திரிகள் மிரட்டல்: விசாரணைக்கு உத்தரவு

சென்னை,

மிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.

அப்போது, சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் அதிகாரியை, அமைச்சர்கள் இருவர் மிரட்டியதாக வருமான வரித்துறையினர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து, மிரட்டல் விடுத்த அமைச்சர்களிடம் விசாரணை நடத்த  சென்னை போலீஸ் கமிஷனர் கரன்சின்கா உத்தரவிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதை தொடர்ந்து தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் வீடு, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் , 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 7 ம் தேதி வருமானவரித்துறையினர்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் மற்றும் தமிழக அரசின்  டில்லி அரசு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல்  சரத்குமார் வீட்டில் அமைச்சர் கடம்பூர் ராஜு  அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்.

இதன் காரணமாக வருமான வரித்துறை மூலம் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் செய்யப்பட்டது.

புகாரின் பேரில், அமைச்சர்களிடம் விசாரணை செய்ய   இணை ஆணையர் சங்கருக்கு  கமிஷனர் கரன்சின்கா உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.