வெள்ள நிவாரண ஹெலிகாப்டர்களில் அமைச்சர்கள் பயணம்…கேரளாவில் திடீர் சர்ச்சை

திருவனந்தபுரம்:

வெள்ளத்தால் பாதித்த மக்களை மீட்க 9 ஹெலிகாப்டர்கள் கேரளா வந்துள்ளன. இந்த ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவும், நிவாரண பொருட்களை விநியோகம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஆனால், கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன் ஆகியோர் நிவாரண முகாமுக்கு செல்ல இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் சங்கனசேரி என்ற இடத்தில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா பகுதியில் இருந்து இந்த நிவாரண முகாமுக்கு செல்ல சாலை வசதி உள்ளது.

இருப்பினும் அமைச்சர்கள் ஹெலிகாப்டர்களில் சென்று கோட்டயம் போலீஸ் மைதானத்தில் தரையிறங்கியுள்ளனர். அங்கிருந்து கார் மூலம் நிவாரண முகாமுக்கு சென்றுள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.