ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..

டெல்லி:

ஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை மோதல் நடைபெற்ற நிலையில்,  இந்திய வான்படைக்கு கூடுதல் பலம் சேர்க்க ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

அதன்படி,  18 ,148 கோடி மதிப்பிட்டில் 33 போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளது. இதில், சுகோய் சு -30 எம்.கே.ஐ மற்றும் 21 மிக் -29 எஸ் ரக போர் விமானங்களை வாங்கவும், தற்போதுள்ள 59 மிக் -29 விமானங்களை புதுப்பிக்கவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த சில நாள்களாக லடாக் எல்லை பகுதியில் இந்திய -சீன இடையே பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.